கொடநாட்டில் அன்று நடந்தது என்ன?.. விஜய் கெஞ்சாத இடமே இல்லையா?.. பேராசிரியர் ஓபன்

சென்னை: விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் தலைவா படம் என்றுமே நினைவிலிருந்து போகாது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் முட்டுக்கட்டையால் படம் ரிலீஸாகாமல் இருந்ததும், விஜய் கைகளை கட்டிக்கொண்டு பேசி வீடியோ வெளியிட்டதையும் இன்றுவரை அவரை கிண்டல் செய்துவருகிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதாவை சந்திக்க எஸ்.ஏ.சியும், விஜய்யும் கொடநாட்டுக்கு போனபோது நடந்தவற்றை முன்னாள் எம்.பியும், விஜய்யின் பேராசிரியருமான ரபி பெர்னார்ட் பேசியிருக்கிறார்.



