ஒரே பெட்டில் முகேஷ் - அன்ஷிதா.. பிக்பாஸ் சீசன் 10ல் காதல் சர்ச்சை.. ஐயய்யோ... ஷாஷிகா பாவம்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிஎன்றாலே சண்டை சச்சரவுகளுக்கு இணையாகக் காதல் கண்டென்ட்டுகளுக்கும் பஞ்சமிருக்காது. ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு காதல் ஜோடியை மையமாக வைத்து ரசிகர்கள் மத்தியில் காரசாரமான விவாதங்கள் எழுவது வழக்கமான ஒன்றுதான். கடந்த சீசனில் கம்ருதீன் - பார்வதி இருவருக்கும் இடையே வெடித்த காதல் விவகாரம் பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்டு, தற்போது இருவரும் திருமணம் வரை சென்றுள்ளனர்.

