என்ஜின் இல்லாமல் தறிகெட்டு ஓடிய 7 சரக்கு ரயில் பெட்டிகள்.. ஜோலார்பேட்டையில் பெரும் விபத்து தவிர்ப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே சந்திப்பில் ரயில்வே ஊழியர்களின் அலட்சியத்தால் என்ஜின் இல்லாத 7 காலி சரக்கு ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் தடம் புரண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 ரயில் தடங்களைக் கொண்ட முக்கிய ரயில்வே சந்திப்பாகவும், ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய ரயில்வே யார்டைக் கொண்டதாகவும் அறியப்படுகிறது ஜோலார்பேட்டை ரயில் நிலையம். ஜோலார்பேட்டை







