அனிருத் திருமண பத்திரிகை செம டிசைனா இருக்கே?.. நகை பெட்டி மாதிரி பயன்படுத்திக்கலாம்

சென்னை: அனிருத்துக்கும், காவ்யா மாறனுக்கும் அடுத்த மாதம் 11ஆம் தேதி திருமணமும், 21ஆம் தேதி ரிசப்ஷனும் நடக்கவிருக்கிறது. ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்பதால்; ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடந்துவருகின்றன. கலாநிதி மாறனும், அவரது மனைவியும் பிரபலங்களுக்கு பத்திரிகை வைக்கும் பணியில் பிஸியாகியிருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களது அழைப்பிதழ் குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கின்றன. திரைத்துறைக்குள் டீன் ஏஜிலேயே வந்துவிட்டார் அனிருத்.


