3 வயது குழந்தையை கொஞ்சுவதாக கூறி அநாகரீகமாக நடந்த இளைஞர்! தடுக்காத தாய்! இருவரும் கைது!

கும்பகோணம்: கும்பகோணம் அருகே மூன்று வயது குழந்தையை கொஞ்சுவது போல் உடல் முழுவதும் கடித்து காயப்படுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார். அந்த இளைஞரின் வெறிச் செயலை தடுக்காமல் வேடிக்கை பார்த்த குழந்தையின் தாயும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் கம்மாள தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி அட்சயா (24).







