நெதன்யாகுவிற்கு வாய்ப்பிருக்கா? ‘கிங் மேக்கராக' மாறும் அரபு கட்சிகள்! இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார்?

டெல்அவிவ்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தலைவரான காடி ஐசென்கோட் ஆகியோரில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் இஸ்ரேல் அரசியலில் அரபு கட்சிகள் கிங்மேக்கர்களாக உருவாகி உள்ளன. இவர்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்களோ? அவர்களால் எளிதாக பிரதமராக முடியும். இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்தது.







