SK 27 அப்டேட்.. படம் தொடங்குறதுக்கு முன்பே இயக்குநரை கவனித்த சிவகார்த்திகேயன்.. சர்ப்ரைஸ் கிஃப்ட்!

சென்னை: திரையுலகில் ஒரு திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிறகு, அதன் இயக்குநருக்கு சொகுசு கார், தங்க சங்கிலி அல்லது விலையுயர்ந்த பரிசுகளை தயாரிப்பாளர்களோ அல்லது கதாநாயகர்களோ வழங்குவதுதான் வழக்கம். ஆனால், தான் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே, இயக்குநருக்கு விலையுயர்ந்த ஐபோனை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.




