பவதாரணிக்கு நடந்தது கொடுமை.. விதி, என்ன சொல்றதுன்னு தெரியல! கங்கை அமரன் உருக்கம்

சென்னை: கங்கை அமரனை இசையமைப்பாளராகவும், இயக்குனர், நடிகர், பாடகர் என பல முகங்களில் தெரிந்திருந்தாலும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி விடுபவர் என்பது பலருக்கும் தெரியும். அதுபோலத்தான் இப்போது தனது அண்ணன் இளையராஜாவின் மகள் பவதாரணி பற்றி கங்கை அமரன் பேசியது சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறது. பவதாரணியின் இறப்பு இளையராஜா குடும்பத்திற்கு பெரிய இழப்புதான்.




