குடும்பத்தையே அழிச்சிடுவேன்.. சந்திரகலாவின் மிரட்டல்... கார்த்திகை தீபத்தில் அடுத்தகட்ட புயல்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் சந்திரகலாவின் சதியால் கார்த்தியின் அண்ணன் அருண் உயிரிழந்துவிடுகிறார். இந்த விஷயம் தெரிந்தும் யாரிடமும் சொல்லாமல் அதை மனதிற்குள் வைத்துக்கொண்டு, சாமுண்டீஸ்வரியின் உயிரை காப்பாற்ற கார்த்திக் போராடி வருகிறார். இன்றைய எபிசோடில், அருணின் உடல் உறுப்புகளை தானமாகக் கொடுக்க முடிவு செய்ததை தொடர்ந்து, அவருடைய இதயத்தைச் சாமுண்டீஸ்வரிக்கு பொருத்தி அவரது உயிரை காப்பாற்ற


