உளுந்தூர்பேட்டை ரேஷன் அரிசியில் நெளிந்த புழுக்கள்.. லாரியையே சிறைபிடித்த கள்ளக்குறிச்சி மக்கள்

கள்ளக்குறிச்சி: அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு தரமான அரிசி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக குறைந்த விலையில் சன்னரக அரிசி விற்பனை, புகார் தெரிவிக்க பிரத்யேக எண்கள் என அடுத்தடுத்த அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன. ஆனாலும், ரேஷன் அரிசி விநியோகத்தில் ஏற்படும் குறைபாடுகள் மட்டும் முழுமையாக தீர்ந்தபாடில்லை.







