பெரும்பான்மை இல்லை.. ஆனாலும், பிரதமராக தொடரும் நெதன்யாகு! இஸ்ரேலில் அரசியல் கேம்!

டெல் அவிவ்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆனால், பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், அவர்தான் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். இது அந்நாட்டில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இஸ்ரேலில் அக்.27ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. தற்போது வரை 86% வாக்குகள் எண்ணப்பட்டிருக்கின்றன. மொத்தம் 120 இடங்கள் இருக்கின்றன.







