சாலை விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் ரூ 25,000 பரிசு - இந்த திட்டத்தை பயன்படுத்துவோர் ஏன் மிகக் குறைவு?

இந்தியாவில் விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு, உரிய நேரத்தில் உதவி செய்து உயிர் காப்பவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் ரஹ்–வீர் (நல்ல சமாரியன்) திட்டத்தில் பரிசுத்தொகையை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஆனால் இந்த திட்டம் அமலுக்கு வந்து 5 ஆண்டுகளாகியும் இதுவரை நாடு முழுவதும் ஆயிரம் பேர் கூட இந்த பரிசுத்தொகையை பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது.







