பழனி முருகன் கோவில் நில மோசடி.. தவெக அரசுக்கு நெருக்கடி! 5 பேர் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை

பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான நிலம் மோசடியாக விற்கப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாடு சிபிசிஐடி (CBCID) காவல்துறையினர் நீதிமன்றத்தில் விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட 90 நாட்களுக்குள், அக்டோபர் 24 அன்று அதிகார வரம்புடைய குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மின்னணு முறையில் இந்தக் குற்றப்பத்திரிகை







