மலையாளத்துக்கு செல்லும் யுவன் சங்கர் ராஜா.. ஜோஜு ஜார்ஜ் தட்டித் தூக்கிட்டாரே!

சென்னை: ‘பனி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கும் புதிய திரைப்படமான ‘பரிபாடி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தின் மூலம் யுவன் சங்கர் ராஜா மலையாள திரையுலகில் அறிமுகமாக உள்ளார். காவ்யா ஃபிலிம் கம்பெனி சார்பில் வேணு குன்னப்பள்ளி தயாரிக்கும் இப்படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ளது.


