மதராஸி படத்துக்குப் பிறகும் மீண்டும் தமிழில் நடிக்கும் ருக்மிணி வசந்த்.. அப்டேட்டே அள்ளுதே!

சென்னை: விஜய் சேதுபதியுடன் ஏஸ், சிவகார்த்திகேயன் உடன் மதராஸி படங்களில் நடித்த ருக்மிணி வசந்த் மீண்டும் தமிழில் நடிக்கவுள்ளார். தனது புதிய படத்தின் அப்டேட்டை தாறுமாறாக வெளியிட்டுள்ளார். 'சப்த சாகரதாச்சே எல்லோ', 'காந்தாரா: சாப்டர் 1' மற்றும் டாக்ஸிக் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த், 'கணம்' பட இயக்குநர் ஸ்ரீ கார்த்திக்குடன் முதன்முறையாக இணைகிறார்.


