குமரி ரவுடி இறப்பில் அதிர்ச்சி ட்விஸ்ட்.. கணவரை கொன்ற தவெக பெண் நிர்வாகி கைது!

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ரவுடி இறந்த விவகாரத்தில், தவெக நிர்வாகியான அவரது மனைவியே, தனது கணவரைக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரும், உதவியாக இருந்ததாக 14 வயது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் பூங்காநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (43). இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.







