தீபாவளிக்கு ’சீன்’ வருது.. திருச்செந்தூர் கோயிலில் சூர்யா திடீர் சாமி தரிசனம்.. அப்போ வெற்றி தான்!

திருச்செந்தூர்: ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடிக்கும் ‘சீன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அடுத்த வாரம் நவம்பர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சூர்யாவின் சீன் படத்தை குடும்பமாக ரசிகர்கள் ரசிக்கும்படியாக யு/ஏ சான்றிதழும் கிடைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



