எங்களை மீறி சவுதியை தொடு பார்க்கலாம்.. ராணுவ வீரர்களை குவிக்க எகிப்து ஒப்புதல்! விரிவடையும் மோதல்

துபாய்: ஹவுதிகளின் தாக்குதலில் இருந்து சவுதி அரேபியாவை காப்பாற்ற எகிப்து தாயாராகி வருகிறது. சவுதி அரேபியாவிற்கு தங்களின் படை வீரர்களை அனுப்ப எகிப்து நாடாளுமன்ற ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் இந்த போரில் சவுதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் எகிப்தும் நுழைய வாய்ப்புள்ளதால் இந்த மோதல் இன்னும் தீவிரமாகும் என அஞ்சப்படுகிறது.







