ஜெயிலுக்கு போகும் நெதன்யாகு.. இஸ்ரேல் தேர்தலில் நடக்கப்போகும் பெரிய டிவிஸ்ட்!

டெல் அவிவ்: இஸ்ரேலில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கையில், நெதன்யாகு ஜெயிப்பார் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஒருவேளை, அவர் தோற்றுவிட்டால் நிச்சயம் ஜெயில்தான். அவர்மீது ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பிரதமர் என்பதால் இந்த வழக்குகளின் விசாரணை மெதுவாக நடக்கிறது. எனவே அவர் தோல்வியடைந்துவிட்டால், விசாரணைகள் சூடுபிடித்து.. அவர் ஜெயிலுக்கு அனுப்பப்பட வாய்ப்பு







