ஸ்ரீபெரும்புதூரில் 8 வயது ஜார்க்கண்ட் சிறுமி மாயம்! தாத்தா, பாட்டியுடன் இருந்த போது காணவில்லை!

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநில தம்பதியின் மகளை காணாததால் போலீஸார் தேடி வருகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அருகே கருமாங்கழனி கிராமத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கல்பனா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதில் மகள் உள்ளார்.







