என்ன டைட்டிலேயே வித்தியாசமா இருக்கே.. ’லவ் இன்க்’ படத்தில் வில்லனான சுனில் ரெட்டி!

சென்னை: எம்.ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ. மகேந்திரன் வழங்க, மேகராஜ் தாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘லவ் இங்க்'. இதில் ராஜ் அய்யப்பா மற்றும் டெல்னா டேவிஸ் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது சென்னையில் நடைபெற்று வரும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் நடிகர் சுனில் ரெட்டி வில்லனாக இணைந்துள்ளார். இன்றைய இளம் தலைமுறையினரின் (Gen-Z) காதல்,





