இந்திய பொருட்கள் தான் வேண்டும்.. பாகிஸ்தானில் அதிகரித்த டிமாண்ட்.. தடைக்கு நடுவேயும் வர்த்தகம் 69% உயர்வு.. எப்படி?

இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் இடையே வர்த்தகம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடைக்கு நடுவேயும் கூட பாகிஸ்தான் தொடர்ந்து நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருவதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி தடைக்கு நடுவேயும் முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 69 சதவீதம் வரை நம் நாட்டின் பொருட்கள் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது.







